இலங்கை பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி – எஸ்.பி. திஸாநாயக்க

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் இளைஞர், மகளிர் மற்றும் தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்யுமாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்படுவதனால் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னமும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும்  எனவே இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *