பிரதான செய்திகள் விளையாட்டு

போட்டிகளில் மீளவும் பங்கேற்க ஆர்வமாக இருக்கின்றேன் – சரபோவா:-

பிரபல டென்னிஸ் வீராங்கனை போட்டித் தடையின் பின்னர் மீளவும் களத்தில் குதிக்க உள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் சரபோவா மீளவும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ம் திகதி க்ரோன் ப்ரீ போட்டித் தொடர் ஒன்றில் சரபோவா பங்கேற்க உள்ளார். ஜெர்மனியில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக சரபோவா தெரிவித்துள்ளார்.

ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் மாரியா சரபோவாவிற்கு பதினைந்து மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக இரண்டு ஆண்டு கால தடை விதிக்கப்பட்ட போதிலும் மேன்முறையீட்டை தொடர்ந்து போட்டித் தடை பதினைந்து மாதங்களாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *