உலகம் பிரதான செய்திகள்

ரஷ்யா என்னை பயன்படுத்திக் கொள்ள எப்போதும் முயன்றதில்லை – டிரம்ப்

தன்னை சங்கடத்துக்குள்ளாக்கும் முக்கிய தகவல்களை ரஷ்யா வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுவதற்கு எதிராக  கடுங்கோபத்துடன் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னை பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா எப்போதும் முயன்றதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தவறான தகவல்களை பொது மக்களிடையே கசிய அனுமதித்த உளவு முகமைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், நாம் என்ன நாஜி ஜெர்மனியிலா வாழ்ந்து வருகிறோம் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் குழு ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்துக்கு ரஷ்யாவும் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *