இலங்கை பிரதான செய்திகள்

இந்த ஆண்டுக்கான பரீட்சை நேர சூசிகைகள் வெளியிடப்பட்டுள்ளன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் குறித்த நேர சூசிகைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலை பரீட்சைகளுக்கான நேர சூசிகைகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *