இந்தியா பிரதான செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு வீட்டின் முன்பு குடும்பத்துடன் மௌன போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு இன்று மாலை தனது வீட்டின் முன்பு குடும்பத்துடன் மௌன போராட்டம் நடத்தியுள்ளார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்றையதினம்  நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை 5 மணிக்கு தனது வீட்டின் முன்பு 10 நிமிடம் நின்று மௌன போராட்டம் நடத்தப் போவதாகவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழர்கள் தங்கள் வீட்டின் முன்பு 10 நிமிடம் மௌனமாக நின்று போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி நடிகர் சிம்பு தியாகராய நகரில் உள்ள தனது வீட்டு வாசலில் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா உட்பட குடும்பத்தினருடன் கறுப்பு நிற ஆடை அணிந்து மௌன போராட்டம் நடத்தினார்.

சிம்பு வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்களும் கறுப்பு சட்டை அணிந்தபடி மௌன போராட்டம் நடத்தினர். அவர்கள் கைகளில் கறுப்புக்கொடியுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி அமைதி போராட்டம் நடத்தினர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *