இலங்கை பிரதான செய்திகள்

தென் இலங்கை அரசியல் தலைமைகளுக்கு தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் புரிந்து கொள்ளமுடியவில்லை:-

மண் மீதான பற்றுதல் காரணமாக வார்த்தைகளாலும், கற்களாலும், பொல்லுகளாலும் தாக்கிக் கொள்கின்றவர்களுக்கு தமிழ் மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதைத்தான் நம்ப முடியவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் நிலங்களை அபகரிக்க வேண்டாம் என்று நடைபெற்ற ஆர்ப்பட்டங்களில் தென் இலங்கை அரசியல் தலைமைகளின் அக்கறைகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குடியிருப்பு நிலங்களை அபகரிக்க வேண்டாம் என்றும், வளமான நிலங்களை வெளி நாடுகளுக்கு தாரை வார்க்க வேண்டாம் என்றும், விவசாய நிலங்களை சூறையாட வேண்டாம் என்றும், அரசியல்வாதிகளும், பொது அமைப்புக்களும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்.

அவ்வப்போது சில பகுதிகளை உரியவர்களிடம் மீளக் கையளிப்பதாகக் கூறியபோதும், அந்த வாக்குறுதிகள் கூட முறையாக செயற்படுத்தப்படவில்லை என தமிழ் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இந்த நிலையிலேயே, தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இன்னும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியிருப்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *