இலங்கை பிரதான செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்:-


நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தி திட்டத்தில் நிதி மோசடி இடம்பெற்றதாக கூறியே முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன கைது செய்யப்பட்டார். இதேவேளை , இந்த சம்பவம் தொடர்பில் சரத் குமார குணரட்னவின் மருமகனையும் கைது செய்ய வேண்டியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts