இலங்கை பிரதான செய்திகள்

பொதுஜன முன்னணிக்குள் பிளவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பொதுஜன முன்னணி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் பிளவு பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கிளைகளை அமைப்பது தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக குருணாகல் மாவட்டத்தில் கிளைகள்  அமைப்பது தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன முன்னணி கட்சி எதிர்வரும் 27ம் திகதி தனது முதலாவது பேராளார் மாநாட்டை நடத்த உள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *