இலங்கை பிரதான செய்திகள்

பிரதமர் ரணில் சுவிட்சர்லாந்திற்கு பயணம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்ஸ்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் நோக்கில் பிரதமர் இன்றைய தினம் அதிகாலை சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலக பொருளாதார மாநாட்டில் சுமார் நாற்பதுக்கும் அதிக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்ள உள்ளனர். இதன்போது பிரதமர், முன்னணி அரச தலைவர்கள் மற்றும் முன்னணி சர்வதேச வர்த்தகர்களுடன் கலந்துரையாடவுள்ளார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்குகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts