இலங்கை பிரதான செய்திகள்

அதுரலிய ரதன தேரர் ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விலகத் தீர்மானம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர், ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற உள்ளதாகவும் தாம் எந்தவொரு அரசியல் கட்சியையும் இனி பிரதிநிதி;த்துவம் செய்யப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அமைப்பு ஒன்றை தாம் உருவாக்கப் போவதாகவும் எதிர்க்கட்சியிலும் தாம் அங்கப் வகிக்கப் போவதில்லை எனவும்  தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதே தமது நோக்கம் எனவும், இனி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் தொடர்புகளைப் பேணப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய பேராளார் மாநாட்டிலும் ரதன தேரர் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *