உலகம் பிரதான செய்திகள்

மத்திய இத்தாலிப் பகுதியில் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்துக்குள் மூன்று நிலநடுக்கம்


மத்திய இத்தாலிப் பகுதியில் இன்றையதினம் ஒரு மணி நேரத்துக்குள் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த  நிலநடுக்கமானது இத்தாலியின் தலைநகரம் ரோமிலிருந்து வெகு தொலைவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது  இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று காலை 10.25 மணியளவில் ஏற்பட்டதாகவும் இது   ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் முன்றாவது நிலநடுக்கம் 50 மற்றும் 10 நிமிட இடைவெளியில் முறையே ரிக்டர் அளவுகோலில் 5.7 மற்றும் 5.3ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு இத்தாலியின் மத்தியப் பகுதி மலை பிரதேசமான அமடிரைஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 300 பேர்  உயிரிழந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *