இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக குற்றச்சாட்டு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிா்ப்புத் தொிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட  செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பொருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் கிளி நொச்சி மாவட்டத்தில்  காணியற்றவா்கள், ஒரு அங்கத்தவா் குடும்பங்கள், காணி கிளிநொச்சியில் இருந்தும் நிரந்தரமாக  மாவட்டத்தில் வசிக்காதவா்கள், என அனைத்து தர்பினா்களிடமும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பொருத்து வீட்டுக்கு மக்கள் பெரும் தொகையில் விண்ணப்பத்துள்ளனா் எனவே அது மக்களின் விருப்பத்திற்குரிய வீடு எனக் காட்டுவதற்கே மீள்குடியேற்ற அமைச்சு இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என  மாவட்ட பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துளளன.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 11 ஆயிரம்  பொருத்து வீட்டு விண்ணப்படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதனை மாவட்டச் செயலகம்  கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு 6500 விண்ணப்பங்களும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு 2300 விணப்பங்களும், பூநகாி பிரதேச செயலக பிாிவுக்கு 1500 விண்ணப்பங்களும், பளை பிரதேச செயலக பிரிவுக்கு 700 என வழங்கியுள்ளது..

இதனை தவிர மீள்குடியேற்ற அமைச்சு அரச திணைக்களங்களுக் அப்பாலும் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்களை வழங்கி விதிமுறைகள், நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாது பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொருத்தமற்ற  பொருத்து வீட்டுக்கு மக்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என வெளிக்காட்டவே அமைச்சு இவ்வாறு  பல நடவடிக்களை மேற்கொண்டுள்ளது பொது  அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனஃ

மக்கள் மத்தயிலும் இந்த பொருத்து வீட்டுத் திட்டத்தை விட்டால் வேறு வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறாது எனவே கொட்டில்களில் இருப்பதனை விட கிடைக்கின்ற எதனையாவது பெற்றுக்கொள்வோம் என்ற நிலையில் விருப்பம் இன்றி விண்ணப்பங்களை பூரணப்படுத்தி வழங்கி வருவதாகவும் சில அதிகாரிகள்  குறிப்பிடுகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *