இந்தியா பிரதான செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலத்திற்கு  சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் அளித்த சட்டமூல வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும்  ஜனாதிபதி; அனேகமாக நாளை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை  வருவதாக திட்டமிட்டிருந்த  ஆளுனர்  முன்கூட்டியே வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *