இலங்கை பிரதான செய்திகள்

அமெரிக்காவுடானன உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம் – ஜனாதிபதி:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்ட டொனால்ட் ட்ராம்பிற்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமெரிக்கத் துணை ஜனாதிபதியாக தெரிவான Mike Pence இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *