பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு செரீனா முன்னேற்றம்

குளோபல் தமிழ்ச் செய்திகள்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்  போட்டித் தொடரின் நான்காம் சுற்றுக்கு அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். மூன்றாம் சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த சக வீராங்கனை நிக்கோல்  கிப்ஸ்சை (Nicole Gibbs )  வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.

உலக டென்னிஸ் தர வரிசையில் இரண்டாம் நிலை வகிக்கும் செரீனா வில்லியம்ஸ், 23ம் தடவை கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மூன்றாம் சுற்றுப் போட்டியில் நிகோல் கிப்ஸை 6-1 6-3 என்ற செற் கணக்கில் செரீனா வீழ்த்தியுள்ளார்.

நான்காம் சுற்றுப் போட்டியில் உலக டென்னிஸ் தர வரிசையில் 16ம் நிலை வகிக்கும் செக்குடியரசு வீராங்கனை பாபரோ ஸ்ரைகோவாவை (Barbora Strycova )எதிர்த்தாட உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *