இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு2 – ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தாக வந்த செய்திக்கு மேனகா காந்தி மறுப்பு

இந்திய மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தார் என வெளியான செய்தி தவறானது என அவர்  தெரிவித்துள்ளார்.

மேனகா காந்தி உச்ச  நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. இவ்விடயம் குறித்து அமைச்சர் மேனகா காந்தியை தொடர்பு கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமனுக்கு தகவல் அளித்த மேனகா காந்தி இது தவறான செய்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை – உயர் நீதிமன்றில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மனு தாக்கல்:-

Jan 23, 2017 @ 10:15

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு தடை கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழர்கள் கலாசாரத்தை மதிப்பதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், அவரது அமைச்சரவை சகாவான மேனகா காந்தி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேநேரம், இதுவரை உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தங்களது கருத்துக்களை கேட்காமல் ஜல்லிக்கட்டு தொடர்பான உத்தரவை பிறப்பிக்க கூடாது என்பது இவர்கள் கோரிக்கை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *