இலங்கை பிரதான செய்திகள்

லொத்தர் சீட்டு விலை உயர்வு குறித்து நிதி அமைச்சு அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை – ஜனாதிபதி

குளோபல் தமிழ்ச் செய்திகள்

லொத்தர் சீட்டு விலை உயர்வு குறித்து நிதி அமைச்சு அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக உயர்த்துவதற்கு நிதி  அமைச்சு அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சின் எதேச்சாதிகார தீர்மானத்தினால் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் மீதும் களங்கம் கற்பிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து மட்டத்தைச் சேர்ந்த மக்களும் விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *