பிரதான செய்திகள் விளையாட்டு

இருபதுக்கு 20 தொடரை வென்றது இலங்கை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டித் தொடரை இலங்கை அணி வென்றுள்ளது. தென்னாபிரிக்க இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த தொடர் வெற்றியின்மூலம் இலங்கை அணி தென்னாபிரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக தொடர் ஒன்றை வெற்றிக்கொண்ட பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இலங்கை அணி தென்னாபிரிக்காவில் வைத்து அந்த அணியுடன் எந்த ஒரு தொடரையும் வெற்றிக்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *