பிரதான செய்திகள் விளையாட்டு

ரொஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்குத் தகுதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.

அரையிறுதிப் போட்டியில் சக வீரர் ஸ்ரான் வோறின்கா (Stan Wawrinka )வை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பெடரர் முன்னேறியுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பெடரர் 7-5 6-3 1-6 4-6 6-3  என்ற செற் கணக்கில் ஸ்ரான் வோறின்காவை வீழ்த்தியுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

ஸ்பெய்ன் வீரர் ரபால் நடாலுக்கும் கிரிகர் டிமிற்ரோவுக்கும் ( Grigor Dimitrov ) இடையிலான அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் வீரர் இறுதிப் போட்டியில் பெடரரை எதிர்த்தாட உள்ளார்.

பெடரர் கடந்த ஆறு மாதங்களாக உபாதை காரணமாக டென்னிஸ் போட்டிகள் எதிலும் பங்கேற்றிருக்கவி;ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *