இலங்கை பிரதான செய்திகள்

உதயங்க வீரதுங்க தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருக்கின்றார்?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினரும், ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர்  நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மிக் தாக்குதல் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

உதயங்கவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக  தெரிவித்துள்ள நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர்  இன்டர் போல் பிடிவிராந்து உத்தரவு குறித்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *