இலங்கை பிரதான செய்திகள்

தென்னை பயிர்செய்கைக்கு மானியங்களை பெற்றுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை

குளோபல் தமிழ்ச் செய்திகள்

தென்னை பயிர்செய்கைக்கு தென்னை பயிர்செய்கை சபையினால் ஜந்து ஏக்கா் தொடக்கம் ஜம்பது ஏக்கா்  பல மானியங்கள் வழங்க்கப்படுகி்ன்றன. ஆனால் மக்கள் அதனை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என வட பிராந்திய முகாமையாளா் தே . வைகுந்தன் தெரிவித்துள்ளாா்.அவா் மேலும் குறிப்பிடுகையில்
தென்னை பயிர்செய்கை சபையினால்  பல்வேறு மானியத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக புது மரநடுகை, புனரமைப்பு என்பவற்றுக்கு தென்னை கன்றுகளை மானியமாக வழங்குவதோடு, ஊடுபயிர்செய்கைக்கு ஏக்கருக்கு பதினையாயிரம் ரூபா வீதம் ஜந்து ஏக்கா் தொடக்கம் ஜம்பது ஏக்கா் வரை பெற்றுகொள்ள முடியும்.
இதேவேளை வறட்சியை தாங்குவதற்காக மண் நீா் பாதுகாப்பு,பொச்சு மட்டை  குழி என்பவற்றுக்கும் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்குகின்றோம், உரம் பயன்பாட்டுக்கு ஒரு மரத்திற்கு 55 ரூபா வீதம் எத்தனை மரங்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியும்,அதேவேளை இந்தப் பிரதேசத்தில் மக்னீசியம் குறைபாடு காணப்படுவதனால் டெலமைற்  பசளை மானியம் வழங்கப்படுகிறது.
அத்தோடு விலங்கு வளா்ப்பு மானியம் ஆதாவது  மாடு வளா்ப்பு ஒரு விலங்கு வளா்ப்புக்கு  ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபா வீதம் வழங்க்கப்படுகிறது. நீா்ப்பாசனம் மானியமாக ஒரு ஏக்கருக்கு 8000 ரூபா பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பல மானியத்திட்டங்களுடன் தென்னை பயிர்செய்கை சபை செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் மக்கள்  இந்த மானியத்திட்டங்களை பெற்று தென்னை பயிர்செய்கையை மேற்கொள்ளவதாக தெரியவில்லை.தென்னை பயிர்செய்கையை மேற்கொள்கின்றவா் தனது சொந்த பணத்தில் செலவு செய்யாது இவ்வாறான மானியங்களை பெற்றே தென்னை பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும். தென்னை பயிர்செய்கை சபையின் வட பிராந்திய முகாமையாளா் தே. வைகுந்தன் தெரிவித்த அவா்
மாவட்டத்தில் உள்ள தென்னை பயிர்செய்கையாளா்கள் பிராந்திய கமநல சேவை நிலையங்களில் உள்ள எங்களது உத்தியோகத்தர்களை தொடா்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டாா்

 அததோடு  கிளிநொச்சியில் 400 பயனாளிகள் தென்னை பயிர்ச்செய்கைக்கான மானியத்திற்கு தொிவு

கிளிநொச்சி மாவட்டத்தில்  தென்னை பயிர்ச்செய்கை சபையினால் வழங்க்கப்படுகின்ற மானியத்திட்டத்திற்கு 400 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களில் முதற்கட்டமாக 200 பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு கரைச்சி  பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது
இதற்காக மொத்தமாக 2.5 மல்லியனுக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் தென்னை பயிர்செய்கை சபையின் தலைவா் கபில கண்டவல, கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், தென்னை பயிா்செய்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சத்தியேந்திரன். மற்றும் பயனாளிகள் ஆகியோா் கலந்துகோண்டனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *