இலங்கை பிரதான செய்திகள்

சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்றைய தினம் காலை பேரூந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதிக் கொண்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள  காவல்துறை வட்டாரங்கள்  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts