இலங்கை பிரதான செய்திகள்

நாட்டை அபிவிருத்தி செய்ய மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றது – அரசாங்கம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நாட்டை அபிவிருத்தி செய்யவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படுவதாக சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டையும் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அநேக நாடுகளை அபிவிருத்தி செய்ய 20 ஆண்டுகள் தேவைப்படுவதாகவும் எனினும் இலங்கையை அபிவிருத்தி செய்ய மூன்று ஆண்டுகள் போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் மூன்று ஆண்டுகளில் அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து பல்வேறு தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *