பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவிற்கு இந்தியா சவாலாக திகழும் – சச்சின்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவிற்கு இந்தியா சவாலாக திகழும் என இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கட் போட்டித் தொடரில் இந்திய அணி சிறந்த திறமைகளை  வெளிப்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

அதன் முதல் போட்டி பெப்ரவரி 23ஆம் திகதி பூனேயில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சச்சின் தெண்டுல்கர் இதனைக் கூறியுள்ளார்.

இந்திய அணி மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாக கூறிய அவர், அதேநேரம் அவுஸ்ரேலிய அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *