இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு2 – சென்னை கடலோரப் பகுதியில் 34 ஆயிரம் சதுர மீட்டருக்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது :

சென்னை கடலோரப் பகுதியில் 34 ஆயிரம் சதுர மீட்டருக்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளதாக  இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 28ம் திகதி சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டதனால் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்துள்ளது.  எண்ணெய் படலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளதனால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது.  கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் கசிவை நீக்க துரித நடவடிக்கையில் இந்திய கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.

கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அளவை தங்களால் அளவிட முடியவில்லை எனவும்  இதனை கப்பலின் உரிமையாளர்தான் கூற வேண்டும் எனவும்  இது அவர்களின் கடமை எனவும் கிழக்கு கடலோர காவல்படை அதிகாரி ராஜன் பர்கோத்ராதெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களை கடற்கரைக்கு  செல்ல அனுமதிக்க  கூடாது எனவும்  கச்சா எண்ணெய் கழிவு தோலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது எனவும் வல்லுனர்கள் கூறியுள்ளனர்,

எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ள எண்ணெய் கழிவினால்  கடலில் வாழும் அரியவகை உயிரினங்கள் – மீன்கள் அழியும்  அபாயம்

Feb 1, 2017 @ 07:31

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டதனால் கடலில் கலந்த கச்சா எண்ணெய் கழிவு எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது.

இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழந்து போகும்  அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மீன் பிடிக்க கடலுக்கு செல்லவே மீனவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி  சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து  புறப்பட்ட கப்பலும் மும்பையில் இருந்து எண்ணெய் ஏற்றிவந்த கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  கப்பலில் இருந்த பல்லாயிரம் லீற்றர்  எண்ணெய் கசிந்து கடலில் கலந்துள்ளது.

எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்துள்ளதை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கடலில் வாழும் அரியவகை உயிரினங்கள் மட்டுமின்றி மீன்களும் இறக்கும் அபாயம் ஏற்ப்பாட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மீன்களை காப்பாற்றவும், கழிவுகளை நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *