உலகம்

முன்னாள் போராளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் – டக்ளஸ்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள், கைதுகள் தொடர்பில் அஞ்ச தேவையில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் ஊடாக வெளியிட்டு உள்ள காணொளி பதிவிலையே அவ்வாறு தெரிவித்து உள்ளார்.

அதில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டு உள்ளது என தெரிவித்து விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பல முன்னாள் போராளிகள் என்னுடன் தொடர்பு கொண்டு இந்த கைது நடவடிக்கைகளில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி உள்ளனர்.

முன்னாள் போராளிகள் சந்தோசமாக சுதந்திரமாக வாழ முடியாத நிலைமைகளை உருவாக்கி வருகின்றார்கள் அதில் இருந்து தம்மை பாதுகாத்து தமக்கு வழிகாட்டுமாறு முன்னாள் போராளிகள் என்னிடம் கோரியுள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகளை அடுத்து அது தொடர்பில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடி உள்ளேன்.

இந்த செய்தி உண்மையா பொய்யா என்பது விசாரணைகள் ஊடாக தெரிய வரும். அந்த வகையில் முன்னாள் போராளிகள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஏனெனில் இந்த புதிய அரசு சரியான நடவடிக்கைகளை இது தொடர்பில் எடுக்கும் என நம்புகின்றேன்.  முன்னாள் போராளிகள் அஞ்ச தேவையில்லை உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன். உங்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை பெற்று தருவேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *