பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்காவின் முன்னணி மெய்வல்லுன வீராங்கனைக்கு 3 மாத போட்டித் தடை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


அமெரிக்க முன்னணி மெய்வல்லுன வீராங்கனைக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான டோன் ஹார்பர் நெல்சன் ( Dawn Harper-Nelson) என்பருக்கே  இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இவர்  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 32 வயதான டோன் ஹார்பருக்கு மூன்று மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் குருதியழுத்தத்திற்கு hydrochlorothiazide என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து வகை வழங்கப்பட்டுள்ளதாக ஹார்பர் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு சீன ஒலிம்பிக் போட்டியில் 100 தடைதாண்டி ஓடுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் ஹார்பர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *