பிரதான செய்திகள் விளையாட்டு

பெட் டென்னிஸ் கிண்ண போட்டிகளில் பிரித்தானியா வெற்றி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பெட் டென்னிஸ் கிண்ண போட்டிகளில் பிரித்தானியர் வெற்றியீட்டியுள்ளது. பிரித்தானியாவின் கெதர் வட்சன் (  Heather Watson )மற்றும் ஜோகானா கொன்ரா ( ( Johanna Konta ) ஆகியோர் பிரித்தானியா அணி சார்பில் போட்டியிட்டனர்.

எஸ்டோனியாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டித் தொடரில் பிரித்தானியா வீராங்கனைகள் லட்விய வீராங்கனைகளை தோற்கடித்துள்ளனர். லாட்வியாவின் டயானா மார்சின்கேவிகா( Diana Marcinkevica) வை வீழ்த்தி  கெதர் வட்சன்  வெற்றியீட்டியுள்ளார்.

உலக டென்னிஸ் தர வரிசையில் 72ம் இடத்தை வகிக்கும் கெதர் வட்சன், 6-3 6-0 என்ற செற் கணக்கில் டயனாவை வீழ்த்தியுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் 10ம் இடத்தை வகிக்கும் ஜோகானா கொன்ரா மற்றுமொரு லட்வி வீராங்கனையான ஜெலீனா ஒஸ்ராபென்கோ (Jelena Ostapenko)  வை 6-2 6-3  என்ற செற் கணக்கில் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *