இலங்கை பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர்

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கியூபாவைச் சேர்ந்த நபர் ஒருவர், இலங்கையர்கள் ஆறு பேர் உள்ளிட்ட 14 பேரை சட்டவிரோதமான முறையில் புளோரிடாவிற்குள் கடத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்திற்கு இடமான படகை கண்காணித்து அதில் பயணித்தவர்களை கைது செய்துள்ளனர். சீனா, ஈக்வடோர், ஜமெய்க்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் கியூப பிரஜையிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *