இலங்கை பிரதான செய்திகள்

கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தை கண்காணிக்கும் இராணுவத்தினர்


தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி 17 நாட்களாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள்  தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், இராணுவத்தினரும் காவல்துறையினரும்  தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு மேலாக விமானப் படையினரின் விமானமொன்று திடீரென வட்டமிட்டுச் சென்றதாகவும்  இதனால் மக்கள் பதற்றமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ராணுவத்தின் கூட்டுச் சதியில் போராட்டக்காரர்களை தாக்கும் முயற்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அது மக்களால் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமது போராட்டத்தை சிதறடிக்கும் நோக்கில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கும் மக்கள், தமது உயிர் பிரிந்தாலும் காணிக்குள் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *