இலங்கை

சிறைச்சாலை பேருந்து மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – காவல்துறை


களுத்துறை மல்வத்த பிரதேசத்தில் சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு 7 பேரை கொலை செய்த சம்பவத்துடன்  தொடர்புடைய குழு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலகக் குழுவிற்கு எதிரான குழு ஒன்றே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும்  தாக்குதலை மேற்கொண்டவர்கள்  காவல்துறையினரின் சீருடையை ஒத்த  நிறத்திலான    ஆடையை  அணிந்து வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.  மேலும் இந்தத் தாக்குதலுக்கு கப் ரக வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும்  குறித்த  வாகனம்  அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *