இலங்கை பிரதான செய்திகள்

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் :

விமானப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் என முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 நாட்களாக கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மண் மீட்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் அவர்களது காணிகள் நாளை 11 மணியளவில் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  நேற்றையதினம் ஜனாதிபயை சந்தித்திருந்த நிலையில் குறித்த பகுதி காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்த  நிலையில் விமானப் படையினர் வசமிந்த குறித்த காணிகளை , நில அளவை திணைக்கள அதிகாரிகள் இன்று  அளவீடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *