இலங்கை

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் கிழக்கின் ஆளணி வெற்றிடங்கள் என  பல விடயங்கள்  தொடர்பில் ஆராயப்பட்டன.

அத்துடன் இதன் போது  கிழக்கு  மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் துயர நிலை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமருக்கு எடுத்துரைத்தார். மேலும் கிழக்கு  மாகாண பட்டதாரிகளின்  கோரிக்கைகள் அடங்கிய மகஜரை முதலமைச்சர் பிரதமரிடம் நேரில் கையளித்ததுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை தற்போதுள்ள பட்டதாரிகளைக் கொண்டு நியமித்து விட்டு ஏனையோரை பயிற்சி அடிப்படையில் உள்வாங்குவது தொடர்பில் இதன் போது பிரதமரிடடம்வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் முழுமையான தரவுகள் ,விடயதானங்கள்  மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச வெற்றிடங்கள் ஆகியவற்றை முழு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு முதலமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்,

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *