இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் போனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநகர் பொது அமைப்புகள் கவனயீர்ப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று சனிக்கிழமை கிளி நகர் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து  கவனயீர்ப்பு பேரணி ஒன்றை  நடாத்தியுள்ளனர்.
 கிளிநகர் கிராம அபிவிருத்திச் சங்கம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் சனசமூநிலையம், என்பன ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை காலை கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றிலிருந்து பேரணியாக   மாவட்டச் செயலகம் வரை சென்று  அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை  மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலினிடம் கையளித்தனர். தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர்  மற்றும் எதிர் கட்சி  தலைவர் ஆகியோருக்கான மகஜரை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளையிடம் கையளித்தனர்.
தொடர்ந்து மாவட்டச் செயலகத்திலிருந்து ஏ9 வீதி ஊடாக காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலுக்குச் சென்று அவர்களுக்குஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு அரசியல் கைதிகளின் விரைவான விடுதலை போன்றவற்றை வலியுறுத்தியே கிளிநகர் பொது அமைப்புகள் இந்த கவனயீரப்பு பேரணியை மேற்கொண்டிருந்தனர்.
 இதேவேளை 20-02-2017 திங்கள்  காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்   ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை கிழமை பதின்முன்றாவது  நாளாக தொடர்கிறது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க  வேண்டாம் எனவும்  இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜநா கால அவகாசம் வழங்க்க கூடாது என்றும்  காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உ றவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது
தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *