இலங்கை பிரதான செய்திகள்

சில நிமிடங்கள் பேசிவிட்டு ஆதரவளிப்பதாக கூறிவிட்டுச் செல்வது ஏமாற்றமளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களால் இன்று(05) பதின்நான்காவது நாளாக  கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில்  பல்வேறு அ ரசியல் தரப்பினர்களும் தங்களிடம் வந்து சில நமிடங்கள்  பேசிவிட்டு  உங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகின்றோம் எனக் கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர்இது தமக்கு  ஏமாற்றம் அளிக்கிறது. நாம்அவர்களிடம் எதிர்பார்த்தது  ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையே  ஆனால் அவ்வாறான எந்த நடவடிக்கையும் எவராலும் மேற்கொள்ளப்படவில்லை என  தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு இன்று ஞாயிற்று கிழமை பதின்நான்காவது  நாளாக  தொடர்கிறது . கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017  அன்று   காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு பதின்நான்காவது  நாளாக தொடர்கிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க  வேண்டாம்  என  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உ றவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது வரையும் பல அரசியல் தரப்புக்கள் வருகை தந்து தம்முடன்  சில நிமிடங்கள் பேசிவிட்டு   தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு  வழங்குவதாக தெரிவித்துவிட்டு செல்கின்றனரே  தவிர வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதாக தெரியவில்லை.

மாறாக  போராட்டத்திற்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் வகையில் வகையில் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அதன் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர் இது பெரும் கவலையளிக்கும் விடயம் என கிளிநொச்சியில் பதின்நான்காவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும்  வலிந்து காணாமல் ஆக்கப்ட்டவர்களின்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *