இலங்கை பிரதான செய்திகள்

சட்டவிரோத ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது


சட்டவிரோத ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் முதல் இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தும் சட்டவிரோத ஆயுதங்களை மீட்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சட்டவிரோதமாக காணப்படும் ஆயுதங்கள் பற்றிய விபரங்களை பொதுமக்கள் மிகவும் இரகசியமான முறையில் வழங்க முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *