இலங்கை விளையாட்டு

தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைய தயாரில்லை – அர்ஜூன ரணதுங்க

தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி தலைவரும் , துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சருமாகிய அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அர்ஜூன ரணதுங்க கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்துக்கொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்நாட்டில் எவ்வாறன திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன எனவும்  எவ்வாறான தவறிழைத்த நபர்கள் விளையாட்டில் ஈடுப்பட்டார்கள் எனபன குறித்து  அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை எனவும்  தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகள் சகோதர விளையாட்டு வீரருக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரவிந்த, அசங்க , சனத் ஆகிய அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் தவறொன்று இழைக்கப்படுமாயின் அத்தவறை சரிச்செய்ய வேண்டும். இல்லையேல் அதிலிருந்து விலக வேண்டுமென்பதையே தான் விசேடமாக குறிப்பிடுகின்றேன் எனவும்  தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் வரமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *