இலங்கை பிரதான செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்கள் இலங்கையர்களை கப்பம் இன்றி விடுவித்துள்ளனர்


சோமாலிய கடற் கொள்ளையர்கள் இலங்கை கப்பல் பணியாளர்களை எவ்வித கப்பத் தொகையும் இன்றி விடுவித்துள்ளனர். இலங்கையர்கள் பணியாற்றிய எரிபொருள் கப்பல் ஒன்றை அண்மையில் சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்தி, கப்பம் கோரியிருந்தனர்.

இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கப்பம் பெற்றுக்கொள்ளாது கப்பல்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்தது கிடையாது. எட்டு ஈரானிய கப்பல் பணியாளர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஓர் நிலையில் இலங்கைப் பணியாளர்கள் பயணித்த எரிபொருள் கப்பலை, கப்பம் எதுவமின்றி கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். இந்த கப்பலை சோமாலிய வர்த்தகர் ஒருவர் குத்தகைக்கு வாங்கியமை தெரிய வந்தவுடன் கப்பல் விடுவிக்கப்பட்டதாக கடற் கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *