இலங்கை பிரதான செய்திகள்

மத்திய வங்கியின் 500 பணியாளர்களை அர்ஜூன் மகேந்திரன் இடமாற்றம் செய்திருந்தார்


மத்திய வங்கியின் 500 பணியாளர்களை அர்ஜூன் மகேந்திரன் இடமாற்றம் செய்தார் என தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் கடமையாற்றிய காலத்தில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திணைக்களங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பல சிரேஸ்ட உறுப்பினர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என நிதிச் சபையின் செயலாளர் எச்.ஏ. கருணாரட்ன, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார். வழமையாக ஆண்டு ஒன்றுக்கு 200 இடமாற்றங்கள் செய்யப்படும் போதும், மத்திய வங்கியின் அப்போதைய ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் 500 பணியாளர்களை இடம் மாற்றியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *