இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

வடக்கு மாகாண மலையக மக்கள் ஒன்றியம் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

வடக்கு மாகாண மலையக மக்கள் ஒன்றியத்தினர் நேற்று 21-03-2017 வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனை அவரது வதிவிடத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  நேற்று மாலை ஜந்து மணி தொடக்கம் ஆறு மணி வரை ஒரு மணித்தியாலயம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மலையக மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், சவால்கள்,பாரபட்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு அது தொடர்பிலான மகஜரும் அவரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சர்  தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு அமைப்புகள் இருப்பது போன்று இவ்வாறு வடக்கு வாழ் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஒரு ஒன்றியம் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது.


ஆனால் இந்த ஒன்றியம் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், அதேவேளை தங்கள் மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்   எனவும் தெரிவித்தார். மேலும் இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து நடவடிக்கைகள் மேற்கொள்வேன் எனவும்  பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றபோது எங்கள் இனத்திற்குள்ளும் பல ஒடுக்கு முறைகள் இருப்பது கவலையளிக்கிறது எனவும் தெரிவித்தார்

இச்சந்திப்பில் வட மாகாண சபையின் முன்னர் உறுப்பினர் நடராஜன். கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனப் பணிப்பாளாரும், சமூக செயற்பாட்டாளருமான பெ.முத்துலிங்கம், மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட மலையக மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் சந்தித்த கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *