இலங்கை பிரதான செய்திகள்

விமல் வீரவன்சவிற்கு உயர் இரத்த அழுத்தம் என்கிறார்கள் மருத்துவர்கள்:-


தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்த காரணமாக இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் விமல் வீரவன்ச, நேற்று முதல் தண்ணீர் அருந்துவதனையும் நிறுத்திக் கொண்டுள்ளார் எனவும் விமல் வீரவன்சவின் உடல் நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டால் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *