இலங்கை பிரதான செய்திகள்

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்களின் கவனயீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக தொடர்கிறது. தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவும்    இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை  இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் எனவும்  இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை  வழங்குங்கள்  எனக் கோரியே   கவனஈர்ப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

அத்துடன்  தமக்கான  காணி உரிமம்  கிடைக்கும் வரை  போராட்டம் தொடரம் எனவும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தெரிவித்துள்ளனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *