இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்துள்ளனர்.

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி  இன்று 7வது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை  அவர்களை  நேற்றையதினம் நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.  கலந்துரையாடலின் போது இப்பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொண்டு தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட இருப்பதாக ஆயர்  தெரிவித்துள்ளார்.

அத்துடன்   கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினருடன் ஆயர் ஜோசப் சிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை நேரடியாக சென்றும் பார்வையிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *