இலங்கை பிரதான செய்திகள்

வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்திய மக்களது காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்கவும் – இரா.சம்பந்தன்:-

வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள மக்களது காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியை நேரில் சந்தித்து சம்பந்தன் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் எனவும் அவற்றை எப்போது விடுவிப்பது என்பதிலேயே பிரச்சினை உண்டு எனவும் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சித்தலைவர் இது தொடர்பில் ராணுவ தளபதியிடமும் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *