இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 பேர் மீது வழக்கு பதிவு


விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல் மற்றும் காவல்துறை உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தமிழக விவசாயிகள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக் நேற்றையதினம் சென்னை மெரீனாவில் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி கடலில் இறங்கி போராட்டம் நடத்திய நிலையில் அவர்களில்  29 பேர்; கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கெதிராகவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *