இலங்கை

3600 கோடி அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது – பிரதமர்


வெளிநாட்டு கடன் தொகையானது தற்கொலை செய்து கொள்ள தூண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 3600 கோடி அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களினால் நாட்டின் பொருளாதாரம் மூழ்கிப் போயுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டுள்ளதனால் அடிமைகளாக வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். நாட்டை மீளவும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்;திக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *