இலங்கை பிரதான செய்திகள்

உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சுழற்சிமுறையில் சிகிச்சை :

அம்பாறை தமன 10ம் கொலணியின் வானேகமுவ பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று  உணவு ஒவ்வாமை காரணமாக  இறக்காமம் வைத்தியசாலையில் 600க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சுழற்சி முறையில் சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியர்கள், தாதியர்கள் பல வைத்தியசாலைகளில் இருந்து அழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். மொஹமட் நஸீர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, நேரில் பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலை என்பதால் இவ் வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  இது ஒரு அவசர அனர்த்தம் எனக்கருதப்படுவதனால்  இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு  உடனடியாக அங்கு தற்காலிக இடம் அமைக்கபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *