விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் யூனிஸ்கான் ஓய்வு


பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பட்ட வீரர் யூனிஸ்கான் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் இறுதியில் தாம் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மிகப் பொருத்தமான தருணத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தமது தீர்மானம் சரியானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகளவு டெஸ்ட் ஓட்டங்களை குவித்த வீரர் என்ற பெருமை மொஹமட் யூசுப்பைச் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. 39 வயதான யூனிஸ் கான் 115 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடி இதுவரையில் 9977 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *