இலங்கை பிரதான செய்திகள்

பிறந்த சிசுவை காட்டில் போட்டுச் சென்ற தாய் கைது:-

பிறந்த சிசுவை காட்டில் போட்டுச் சென்ற தாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாதம்பே கல்முருவ ஹேனேபொல என்னும் இடத்தைச் சேர்ந்த 37 வயதான திருமணம் ஆகாத பெண் ஒருவரே இன்றைய தினம் தனது வீட்டிலேயே குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண், அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சிசுவை போட்டுச் சென்றுள்ளதாக மாதம்பே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாடுகளை மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் சிசுவொன்று அழும் சத்தத்தை கேட்டு அந்தப் பகுதிக்கு சென்ற போது சிசுவொன்று தனியாக இருப்பதனை கண்டுள்ளார். குறித்த நபர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதாகவும், சிசு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெற்ற பிள்ளையை காட்டில் விட்டுச் சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *