உலகம்

ரஸ்ய தாக்குதலுடன் தொடர்புடையவர் மேலிடத்து உத்தரவுகளை பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார்


ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பக் புகையிரத நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர், தாம் மேலிடத்து உத்தரவுகளை பின்பற்றியதாகக் தெரிவித்துள்ளார்.  அண்மையில் சென்பீட்டர்ஸில் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் கிரிகிஸ்தானைச் சேர்ந்த அப்ரோர் அஸிமோவ் ( Abror Azimov ) என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம் என்ன செய்கின்றோம் என்பது குறித்து தெரியாமல் செய்ததாகவும் , ஒருவரின் உத்தரவுகளையே தாம் பின்பற்றியதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *